ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்! வெளியான தகவல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் பல ஆடைத்தொழிற்சாலை ஒப்பந்தங்கள் பங்களாதேஷை நோக்கி நகர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இலங்கையின் ஆடைத் தொழிலாளர்கள் வேலை இழப்பை எதிர்நோக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
கோவிட்-19 தொற்று காலப்பகுதியில் கூட ஆடைத்தொழிற்துறை வருவாயை ஈட்டியிருந்ததுடன் 2022ஆம் ஆண்டு இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில், ஆடைத்தொழிற்துறை அரைவாசியை கொண்டிருந்தது.
சர்வதேச சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆடைகளுக்கான கேள்வி குறைவு காரணமாக ஆடைத்தொழிற்துறை பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது.
இதனால் ஆடை ஏற்றுமதி வருவாயை பிரதானமாக நம்பியிருக்கும் இலங்கை போன்ற நாடுகள் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.