நீதிபதிகளின் சம்பளம் தொடர்பான மனுக்கள் தள்ளுபடி

நீதிபதிகளின் சம்பளத்தில், உழைக்கும் போது செலுத்தும் வரியை அறவிடும் தீர்மானத்தை வலுவிலுக்க செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாமின் பெரும்பாலான நீதிபதிகளின் இணக்கத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம், இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் தொழிலாளர் நீதிமன்ற தலைவர்கள் சங்கம் ஆகியன இது தொடர்பான மனுக்களை முன்வைத்திருந்தன.

நீதித்துறை அதிகாரிகள் சுயாதீனமாக கடமையாற்றும் குழுவாக இருப்பதால், உள்நாட்டு வருவாய் சட்டத்தின்படி அவர்களது சம்பளத்தில் இருந்து வரி விதிக்க முடியாது என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்படி, நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன, சோபித ராஜகருண, மேனகா விஜேசுந்தர, டி.என்.சமரகோன் மற்றும் நீல் இத்தவெல ஆகிய ஐவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில்  இந்த மனுக்கள் ஆராய்யப்பட்டன.

அதில், சோபித ராஜகருண, மேனகா விஜேசுந்தர மற்றும் நீல் இத்தவெல ஆகிய  நீதியரசர்கள் குழாமின் பெரும்பான்மையான நீதிபதிகள், உரிய மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

இந்த விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பு வழங்குவது நியாயமற்றது எனவும் தார்மீகமானது இல்லை என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

வரி தொடர்பான தீர்மானங்கள் அரசியலமைப்பு சபை மற்றும் நிறைவேற்று விடயம் என்பதால், அதில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று பெரும்பான்மையான நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button