கீரி சம்பா அரிசியின் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு!
நாட்டில் கீரி சம்பா அரிசியின் விலை 30 ரூபாவால் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க நிர்ணய விலையை மீறி விற்பனை செய்வதால் ஒரு கிலோ கீரி சம்பா அரிசியின் சில்லறை விலையை சுமார் 30 ரூபாவால் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் சங்கம் அறிவித்துள்ளது.
சமகாலத்தில் கீரி சம்பா நெல்லை அரசு கொள்முதல் செய்யாததாலும், கட்டுப்பாட்டு விலையை பராமரிக்காததாலும் ஆலை உரிமையாளர்கள் விவசாயிகளிடம் இருந்து 64 கிலோ கொண்ட நெல் மூட்டையை 7000 தொடக்கம் 8000 ரூபாய் வரையான விலையில் கொள்வனவு செய்கின்றனர்.
நிர்ணய விலையானது ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியை அரிசி ஆலை உரிமையாளர்கள் 260ரூபாவுக்கு விற்பனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் அரிசி சில்லறை விற்பனையின் போது 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் கூறுகின்றனர்.
ஆனால், ஆலைகளில் இருந்து நாட்டு அரிசி கொள்முதல் செய்தால், அதில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு, கீரி சம்பா அரிசி இருப்பை கட்டாயம் கொள்முதல் செய்ய வேண்டும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.
சிறிய ஆலைகளில் இருந்து ஒரு கிலோ நாட்டு அரிசி 180 ரூபாய்க்கு விற்கப்படுவதோடு பெரிய அளவிலான ஆலை உரிமையாளர்கள் 210 ரூபாய்க்கு விற்கின்றனர்.
எவ்வாறாயினும், ஆலை உரிமையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரிசிக்கு விதிக்கப்பட்ட 2.5 சதவீத சமூக பாதுகாப்பு மானியத்தை நீக்கியுள்ளார்.
இதற்கமைய விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கும் மானியத்தில் ஒரு கிலோவுக்கு கிட்டத்தட்ட ஏழு ரூபாய் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும், காய்ந்த அரிசியின் கட்டுப்பாட்டு விலையை விட 08 ரூபாய்க்கு குறைவாகவே விற்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்த விடயமாகும்.