இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி!

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 198 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஒக்லாந்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷனக்க முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

அதனடிப்படையில் முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களை இழந்து 274 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்ப்பில் பின் ஆலன் 51 ஓட்டங்களையும், ரச்சின் ரவீந்திரன் 49 ஓட்டங்களையும், டாரில் மிட்செல் 47 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சமிக கருணாரத்ன 4 விக்கெட்டுகளையும், கசுன் ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களையே பெற்று தோல்வியை தழுவியது.
274 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button