இறக்குமதி தடைகளால் இலங்கை பெற்ற வருமானம் – வெளியான புதிய தகவல்
இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்ததன் மூலம் 526 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும் 286 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது 930 பொருட்கள் மட்டுமே நாட்டிற்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை, 2019 ஆம் ஆண்டு 1950 மில்லியன் அமெரிக்க டொலர் பொருட்கள் இறக்குமதிக்காக செலவிடப்பட்டதாகவும், ஆனால் 2022 ஆம் ஆண்டு இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக 1698 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.