ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சற்று அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 288.46 ரூபாவாகவும், 297.46. ரூபாவாகவும் உள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 288.66 ரூபாவாகவும், 297.66 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
இதேவேளை, மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாட்டு நிணயங்களுக்கு நிகராக ரூபாவின் பெறுமதி இன்று உயர்ந்துள்ளது.