இலங்கை-இந்திய கப்பல் சேவை ஜனவரி முதல் மீண்டும் ஆரம்பம்
இடைநிறுத்தப்பட்டுள்ள இலங்கை-இந்திய கப்பல் சேவையானது ஜனவரி தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் இலங்கை இடையே மிக நீண்டகாலமாக இடம்பெற்று வந்த கப்பல் சேவை, கடந்த காலத்தில் நிலவிய யுத்தம் காரணமாக சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
கடந்த 2023ம் ஆண்டு பல்வேறு தரப்பினரின் பலத்த முயற்சி காரணமாகக் குறித்த கப்பல் சேவை மீண்டும் ஆரம்பமானது. எனினும் வட-கிழக்கு பருவமழை காரணமாக சமீப நாட்களாக குறித்த கப்பல் சேவை இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எதிர்வரும் ஜனவரி 02ம் திகதி தொடக்கம் இலங்கை-இந்திய கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், அதற்கான முன்பதிவுகள் டிசம்பர் 25ம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.