சட்டக்கல்லூரி தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

சட்டக்கல்லூரி தொடர்பில் அதிபர் ரணில் விடுத்துள்ள பணிப்புரை | Ranil Resolution Regarding Law College

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், அரசாங்கத்துக்கு சொந்தமான இடமொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று(06) இடம்பெற்ற சந்திப்பிலேயே அதிபர் இதற்கான இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“2024ஆம் ஆண்டில் 150 ஆவது வருட பூர்த்தியை கொண்டாடவிருக்கும் சட்டக்கல்லூரி 3 அதிபர்களை உருவாக்கியுள்ளது.” என்றார்.

இதன்போது, சட்டக் கல்லூரியின் வசதிகளை மேம்படுத்துவதற்கு அவசியமான திட்டத்தை விரைவில் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், முதற் கட்டமாக 40 பேர்சஸ் காணியை ஒதுக்குமாறும், திட்டத்துக்கு அவசியமான மேலதிக இடப்பரப்பை நீதி அமைச்சுடன் கலந்தாலோசித்த பின்னர் பெற்றுக்கொடுக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்தநிலையில், அதிபரின் கோரிக்கைக்கு அமைய நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணியொன்றை சட்ட கல்லூரிக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உறுதியளித்ததாக அதிபர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button