உள்ளூராட்சித் தேர்தலுக்கான செலவு வரையறை வெளியீடு
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஒரு வேட்பாளர் எவ்வளவு பணத்தைச் செலவிடலாம் என்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தொகுதிகளிலும் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு வாக்காளருக்காகச் செலவிடப்படக்கூடிய தொகை 74 ரூபா முதல் 160 ரூபா வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச சபையில் வாக்காளர் ஒருவருக்கு 74 ரூபா செலவிடலாம் என்பதே குறைந்தபட்ச நிர்ணயமாகக் காணப்படுகின்றது.
தென்னிலங்கையைச் சேர்ந்த தொகுதியொன்றில் வாக்காளர் ஒருவருக்காக அதிகபட்சமாக 160 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.