அரசிற்கு ஏற்படப்போகும் ரூபா 1000 கோடி நட்டம்!
நிலக்கரியின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால் நிலக்கரி கொள்வனவு செய்வதற்கான புதிய ஒப்பந்தத்தை அவசரமாக அழைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடிஅதிபர் ரணிலிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு மெட்ரிக் தொன் ஒன்றுக்கு 230 முதல் 240 டொலர்கள் விலையில் சுமார் 10 நிலக்கரி கப்பல்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், அந்த விலையில் நிலக்கரியை கொள்வனவு செய்தால் அரசாங்கத்திற்கு 1000 கோடி ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்படக்கூடும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
இந்நிலையை கருத்தில் கொண்டு, வரும் குளிர்கால பருவத்திற்கு முன், நிலக்கரி கொண்டு வர, புதிய டெண்டரை கோரினால், ஒரு மெட்ரிக் தொன்னை, 200 டொலருக்கும் குறைவாக பெற முடியும்.
தான் மின்துறை அமைச்சராக இருந்தபோது பொறியாளர்களுடன் இணைந்து சுனித்யா ஆற்றலை மேம்படுத்த முயற்சித்ததாகவும், பல்வேறு காரணங்களால் வெற்றிபெற முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.