இலங்கைக்கு பேரிடி – இழக்கும் அபாயத்தில் 1000 கோடி டொலர்..!

இலங்கைக்கு பேரிடி - இழக்கும் அபாயத்தில் 1000 கோடி டொலர்..! | Sri Lanka Will Lose Usd 1000 Crore In Compensation

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான சட்ட நடவடிக்கையை அடுத்த 45 நாட்களுக்குள் ஆரம்பிக்கப்படாவிட்டால், 10 பில்லியன் (1000 கோடி) அமெரிக்க டொலர் இழப்பீட்டுத்தொகையை இலங்கை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்படுள்ளது.

இலங்கை சட்டத்தின் கீழ், சம்பவம் நடந்த இரண்டு ஆண்டுகளுக்குள், அதன் மூலம் 2023 மே 29 க்கு முன், இழப்பீடு கோருவதற்கான வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று சி.ஈ.ஜே. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்யத் தவறினால் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் அமைச்சரவையின் தோல்வியாக அமையும் என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைக்கு, கடல் சுற்றுச்சூழல், கடற்கரை மற்றும் அண்டைய சமூகங்கள், சுற்றுலா, மீனவர்கள் மற்றும் வளிமண்டலத்தில் ஏற்படும் மாசுபாட்டிற்கு இழப்பீடாக 6.4 பில்லியன் (640 கோடி) அமெரிக்க டொலர்கள் கோரப்பட்டுள்ளது.

சட்ட ஆலோசனையின் அடிப்படையில், இலங்கையில் தற்போதுள்ள சட்ட முன்மாதிரிகள் மற்ற தொழில் வல்லுநர்களால் மீண்டும் வலியுறுத்தப்பட்ட இழப்பீடுகளைப் பெற போதுமானவை என்பதை சி.ஈ.ஜே. அடையாளம் காட்டுகிறது.

எனினும், தற்போது, அமைச்சரவை, நீதி அமைச்சகம், சட்டமா அதிபர் திணைக்களம் இணைந்து, சிங்கப்பூரில் உள்ள சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முடிவை எடுத்துள்ளமை, நிச்சயமற்ற உணர்வை உருவாக்கியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button