குறைந்துள்ள வங்கி வட்டி வீதங்கள்!

நாட்டினுடைய பொருளாதாரம் தற்போது ஸ்த்திரம் அடைந்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை ஸ்த்திரமடைந்து வருவதன் காரணமாக, பணவீக்கம் மற்றும் வங்கி வட்டி வீதங்களை குறைந்த மட்டத்தில் அரசாங்கம் பேணி வருகின்றது.

நாட்டின் பொருளாதார நிலை ஸ்த்திரமடைந்து வருகின்றது. ரூபாவின் பெறுமதி நிலையானதாக உள்ளது. வட்டி வீதங்கள் குறைந்த மட்டத்தில் பேணப்பட்டு வருகின்றன.

இவற்றை இதேபோல சாதகமான நிலையிலேயே கொண்டு செல்வதற்கு எமக்கு பலமான அரச சேவை அவசியம். நாட்டை கட்டியெழுப்ப அரச சேவையாளர்களின் பங்கு எமக்கு அளப்பரிய ஒன்றாக காணப்படுகின்றது.

அரச ஊழியர்கள் கேட்ட சம்பள உயர்வினை நாங்கள் வழங்கியுள்ளோம். ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச சேவையாளர்கள் அனைவருக்கும் அதிகரித்த சம்பளம் தற்போது கிடைக்கப்பெறுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அனுபவித்த அனைத்து சலுகைகளும் தற்போது குறைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது மேலும் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button