குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை : வெளியான அறிவிப்பு
நாட்டில் நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையானது இன்று (02) முதல் நடைமுறைப்படுத்தப்படுமென லங்கா சதொச நிறுவனம் (Lanka Sathosa) அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், மொத்தக் கொள்வனவின் போது சீனாவில் (China) இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு கிலோ ஒன்றின் விலை 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கோதுமை மாவின் விலையை கணிசமான அளவு குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.