மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு : கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மகாபொல புலமைப்பரிசில்களை தாமதமின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன(Madura Seneviratne) தலைமையில் இன்று (24) இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முதலாமாண்டு மாணவர்களுக்கு மகாபொல கொடுப்பனவு கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் ஏனைய ஆண்டுகளில் மாணவர்களுக்கு மகாபொல கொடுப்பனவை தாமதமின்றி வழங்குவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவுகளில் ஏற்படும் தாமதங்களைக் குறைப்பதற்கான நீண்டகால வேலைத்திட்டமாக, மகாபொல புலமைப்பரிசில் பெறுநர்களின் கணினிமயமாக்கப்பட்ட தரவு முறையை நவீனமயமாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் கூறுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button