பல கோடி ரூபாக்கு வாகனங்கள் வாங்கிய மகிந்த ராஜபக்ஷ..!
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதை தடை செய்த காலப்பகுதியில், பல கோடி ரூபாவுக்கும் மேலான தொகையில் வாகனம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அப்போதைய நிதியமைச்சர் மகிந்த ராஜபக்ஷ, நிதியமைச்சகத்தின் மூலம் 1,140 மில்லியன் ரூபாய் கடன் கடிதங்களை திறந்து வைத்துள்ளதாகவும் முழுமையாக பணம் செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் நடத்திய கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.
இந்த வாகனங்கள் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இறக்குமதி செய்யப்பட்டன. அப்போது பசில் ராஜபக்ச நாட்டின் நிதி அமைச்சராக செயற்பட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி மகிந்த ராஜபக்ஷ நிதியமைச்சராக வழங்கிய கடிதத்திற்கமைய,
225 மோட்டார் ஜீப்கள்,
50 டப்ல் கெப் வண்டிகள்,
50 உயர் கூரை கொண்ட அம்புலன்ஸ்கள்,
50 பவுஸர்கள், இறக்குமதி செய்வதற்காக 08 கடன் கடிதங்கள் வங்கிகளில் திறக்கப்பட்டுள்ளன என்றும் தெரியவந்துள்ளது.
இந்த கடன் கடிதங்கள் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி அன்று வழங்கப்பட்டன.
பின்னர், நிதி அமைச்சிற்கு கிடைத்த வேண்டுகோளுக்கயை, 225 புத்தம் புதிய Toyota Land Cruiser பிராடோ ஜீப்களின் இறக்குமதிக்காக திறக்கப்பட்ட 03 கடன் கடிதங்கள் இரத்து செய்யப்பட்டன எனவும் தெரிவிக்கப்படுள்ளது.