இலங்கையில் மருத்துவ உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு!

இலங்கையில் மருத்துவ உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு: மருத்துவ அதிகாரிகள் சங்கம் விசனம் | Goverment Hospital Medical Equipment Scarcity

அரசாங்க மருத்துவமனைகளில் சத்திரகிசிச்சை உபகரணங்கள் உட்பட மிகவும் அவசியமான மருத்துவ உபகரணங்களிற்கு பெரும் பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார தொழில்துறை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதன்போது உணவுக்குழாய் ஸ்டென்ட் போன்றவற்றிற்கும் பற்றாக்குறை நிலவுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், மிகவும் அவசியமான சத்திரகிசிச்சை உபகரணங்களிற்கு பற்றாக்குறை காணப்படுகின்றதாகவும் 3800 முதல் 5800 வரையிலான உபகரணங்கள் முற்றாக முடிவடைந்துவிட்டன என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளிற்கான மருத்துவ ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

அவசர சேவைகளிற்கு தேவையான மருத்துவ உபகரணங்களும் பற்றாக்குறையாக உள்ளன என மேலும் தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக கடும் கரிசனை ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு அதிகாரியொருவர் உபகரணங்கள் இன்மையால் சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டதாக உத்தியோகபூர்வமான தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button