மருந்து விநியோகஸ்தர்களுக்கு 1100 கோடி ரூபா கடன் – சுகாதார அமைச்சு தகவல்

மருந்து விநியோகஸ்தர்களுக்கு 1100 கோடி ரூபா கடன் - சுகாதார அமைச்சு தகவல் | Loan To Medicine Distributors

1100 கோடி ரூபா பணம் செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ளதால், உள்ளுர் மருந்து விநியோகஸ்தர்கள் மருந்துகளை வழங்கத் தயங்கும் நிலை காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்கவிடம் வினவிய போது, “நிலுவை ரசிதுகள்(bill)செலுத்துவதற்கு ஏற்கனவே திறைசேரியில் பணம் கோரப்பட்டுள்ளது.

கட்டம் கட்டமாக பணத்தை செலுத்துவதற்கு திறைசேரியில் முடிவு செய்தோம்.

அதுமட்டுமல்லாமல், மற்ற இறக்குமதியாளர்களுக்கு மேலும் 300 கோடி செலுத்த வேண்டியுள்ளது.

நாடு முழுவதும் 161 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், அந்த மருந்துகளுக்கும் ஏற்கனவே கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளதாகவும்” குறிப்பிட்டாார் .

அதனையடுத்து இந்த மருந்துகள் அடுத்த சில வாரங்களில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button