14 ஆண்டுகளின் பின் இந்தியாவில் களமிறங்கவுள்ள மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி

14 ஆண்டுகளின் பின் இந்தியாவில் களமிறங்கவுள்ள மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி | Lionel Messi Is Coming To India Big Tournament

ஆர்ஜென்டீனாவின் நட்சத்திர கால்ப்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி நட்புறவு போட்டிகளில் விளையாட இந்தியாவிற்கு வருகைத்தரவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆர்ஜென்டீனா அணியினருடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தியா வரவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்ஜென்டீனா அணியினர் 2025இல் கேரளா – கொச்சி நகருக்கு நட்பு முறை கால்பந்து போட்டிகளில் விளையாட வரவிருப்பதாக கேரள விளையாட்டுத் துறை அமைச்சர் வி அப்துர் ரஹ்மான் தெரிவித்திருந்தார்.

இதன்படி இந்தியாவில் கால்பந்து போட்டிகளை ஊக்குவிக்கும் முயற்சியாக ஆர்ஜென்டீனா அணியின் அதிகாரப்பூர்வ பங்குதாரரான, இந்தியா நிறுவனம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தப் போட்டிகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

இதன்மூலம், உலகப் புகழ்பெற்ற வீரர் மெஸ்ஸி உட்பட ஆர்ஜென்டீனா அணியினர் அக்டோபர் 2025இல் சர்வதேச நட்புறவு போட்டிகளில் விளையாட இந்தியா வரவுள்ளனர்.

14 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு வந்த ஆர்ஜென்டீனா அணி கேரளத்தில் நடைபெற்ற சர்வதேச நட்புறவு போட்டியில் வெனீசுலாவுக்கு எதிராக விளையாடியது.

இந்தப் போட்டி கோல்கள் எதுவும் அடிக்கப்படாமல் சமநிலையில் முடிந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button