கையடக்கத் தொலைபேசிகள் குறித்து அரசின் அவசர அறிவிப்பு

கையடக்கத் தொலைபேசியை கொள்வனவு செய்யும் போது, ​​குறித்த தொலைபேசி, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசியா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அதன் இணக்கப் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.

குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் இதனை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என மேனகா பத்திரன விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு, IMEI என டைப் செய்து இடைவெளி விட்டு, 15 இலக்க IMEI எண்ணை டைப் செய்து அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க ஏதேனும்  கையடக்க தொலைபேசி வலையமமைப்பின் மூலம் 1909 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

அதன் பின்னர் அந்த கையடக்க தொலைபேசி பதிவு செய்யப்பட்டதா? இல்லை என்பது தொடர்பில் குறுஞ்செய்தி மூலம் தகவல் வழங்கப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button