இலங்கைக்கு படையெடுக்கும் ஆயிரக்கணக்கான சாகச கலைஞர்கள்
வருடாந்தம் 10,000க்கும் அதிகமான சாகச கலைஞர்களை இலங்கைக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் உள்ள சாகச மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான ‘Go Bungy’ நிறுவனம் குறித்த சாகச கலைஞர்களை இலங்கைக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளது.
அந்த நிறுவனத்துடன் உலகெங்கிலும் சுமார் 50,000 சாகச கலைஞர்கள் இணைந்துள்ளதுடன், அவர்களைத் தொடர்பு கொள்வதற்கான ஒப்பந்தத்தில் ‘Go Bungy’ நிறுவனமும் கொழும்பு தாமரை கோபுர நிர்வாகமும் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த சாகச கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இவ்வருட இறுதியிலிருந்து ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.