துருக்கி நிலநடுக்கம் – 42,000 பேர் பலி!
துருக்கி, சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் கடந்த 6 ஆம் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது. அந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து பல பின்னதிா்வுகள் ஏற்பட்டன. அவற்றில் ஒரு பின்னதிா்வு ரிக்டா் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதியும் சிரியாவின் வடக்குப் பகுதியும் மிகக் கடுமையாகக் குலுங்கின.
இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. இதில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, நிலநடுக்கத்துக்கு 42 ஆயிரம் போ் பலியாகியுள்ளனா். அவா்களில் துருக்கியில் 36187 பேரும், சிரியாவில் 5,800 பேரும் அடங்குவா்.
கட்ட இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.