அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் இழைத்துள்ள அநீதி – வஜிர அபேவர்தன

தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தை 50 ஆயிரம் ரூபாவாக அதிகரித்திருக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பினால் எந்த பிரயோசனமும் இல்லை. ஏனெனில் 77 வருடங்களாக நாட்டில் தேங்காய் ஒன்றின் விலை 80 ரூபா முதல் 100 ரூபா வரை இருந்தது.

அதனால் மக்களுக்கு வாழ்வது மிகவும் கஷ்டமான நிலை என தெரிவித்து ஜனவரி மாதம் முதல், அரச ஊழியர்களின் சம்பளத்தை 25ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

தேங்காய் விலை 80, 100 ரூபாவாக இருக்கும்போதே ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களின் சம்பளத்தை 25 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தார். ஆனால் தற்போது தேங்காய் ஒன்றின் விலைக்கு அமைய அரச ஊழியர்களின் சம்பளத்தை 50ஆயிரம் ரூபா வரை அதிகரித்திருக்க வேண்டும்.

அரச துறை மாத்திரமல்லாது ஒட்டுமொத்த இலங்கையின் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக சம்பள அதிகரிப்பில் அரச துறையில் மத்திய நிலையில் இருப்பவர்களுக்கு பாரிய அநீதி ஏற்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் 2இலட்சம் ரூபாவுக்கு மோட்டார் கைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்ய முடியுமாகி இருந்தது. ஆனால் தற்போது மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்ய 6,7 இலட்சம் ரூபா தேவைப்படுகிறது. தவணை அடிப்படையில் பணம் செலுத்துவதாக இருந்தாலும் அன்று, எடுக்கும் சம்பளத்தில் 12ஆயிரம் ரூபா செலுத்தப்பட்டது. ஆனால் தற்போது 40 ஆயிரம் ரூபா வரை செலுத்த வேண்டி ஏற்பட்டிருக்கிறது.

அதனால் இதன் பெறுபேறு எதிர்வரும் டிசம்பர் மாதமாகும்போது கிடைக்கும். இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான நிலைக்கு நாங்கள் முகம்கொடுக்க நேரிடும் என்பதை எனது அரசியல் வாழ்க்கை அனுபவத்தில் தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button