மீண்டும் சிக்கலில் நாமல்! CID விசாரணைகள் ஆரம்பம்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சட்டத்தரணி தகைமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று(03.04.2025) அறிவித்துள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான குடிமக்கள் அதிகாரம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணை தொடங்கப்பட்டது.
இலங்கை சட்டக் கல்லூரி பரீட்சைகளின் போது, நாமல் மோசடியில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசேட கவனம் செலுத்தவுள்ளதாக சிஐடியின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணக்கங்ளை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, விசாரணை முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.