26.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை!
இலங்கையின் காலநிலை செழுமைத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு 2030 ஆம் ஆண்டளவில் 26.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என ‘பெர்லின் குளோபல் மாநாட்டில்’ உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு தீர்வு காணும் உயர்மட்ட உலகளாவிய முயற்சியான “பெர்லின் குளோபல்” மாநாடு இன்று (28) ஆரம்பமானது.
இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (27) அதிகாலை ஜேர்மனிக்கு சென்றிருந்தார்.
இலங்கையின் காலநிலை மாற்றத்தைக் குறைத்தல் மற்றும் கடன் மறுசீரமைப்பு என்பன வெற்றியடையும் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச நிதியைக் கொண்டு இலங்கை அதனைக் கையாள வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.