டுவிட்டருக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜேக் டோர்சி – அறிமுகமாகும் புதிய செயலி..!

twitter bluesky

டுவிட்டர் செயலிக்கு மாற்றாக அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி Jack Dorsey புதிய சமூக வலைத்தள செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

டுவிட்டர் நிறுவனத்தை உலகின் முன்னணி பெரும் பணக்காரரான எலன் மஸ்க் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைப்பற்றினார்.

அதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் அதிகாரிகள், பணியாளர்கள் பலர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதன்போது, டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த Jack Dorsey அந்நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.

எனினும், அவர் விரைவில் டுவிட்டர் நிறுவனத்தில் மீண்டும் இணைவார் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டுவிட்டர் போன்ற புதிய சமூக வலைதளத்தை Jack Dorsey அறிமுகப்படுத்தியுள்ளார்.

டுவிட்டர் -ஐ ஒத்த வகையில் பயன்படுத்தப்படும் இந்த சமூக வலைத்தளத்திற்கு Bluesky என பெயரிடப்பட்டுள்ளது. அப்பில் (Apple)இயங்குதளத்தில் சோதனை முயற்சியாக வெளியிடப்பட்டுள்ள இந்த செயலியானது விரைவில் அன்ரொய்ட் (Android) இயங்குதளத்திலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பாண்டு மே மாதத்திற்கு இதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு தயாராகிவிடும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள Jack Dorsey, பயனர்களின் வசதிக்கேற்ப இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button