நாட்டில் ஆபத்தான கோவிட் திரிபு பரவுகிறதா..! பரிசோதனை ஆரம்பம்
இலங்கையில் மிகவும் ஆபத்தான கோவிட் திரிபு பரவி வருகின்றதா என்பது குறித்து பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது நாட்டில் பரவி வரும் கோவிட் திரிபினை அடையாளம் காணும் நோக்கில் இந்த பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
நாட்டில் அண்மைய நாட்களாக கோவிட் பரவுகை அதிகரித்து வரும் நிலையில் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார்.
கோவிட் ஒமிக்ரோன் எக்ஸ்.பி.பி. (Omicron XBB) திரிபு நாட்டில் பரவத் தொடங்கியுள்ளதாக வெளியிடப்படும் தகவல்களை உறுதி செய்து கொள்ளும் நோக்கில் இவ்வாறு பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக கலாநிதி சந்திம தெரிவித்துள்ளார்.