புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளுக்கான கட்டணங்கள் தொடர்பில் வெளியான தகவல்
தேசிய மின்கட்டமைப்புக்கு வழங்கப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அடிப்படையிலான மின்சார விநியோகத்திற்கான கட்டணங்களைக் குறைப்பற்கான திட்டத்தை அமைச்சரவை பரிசீலிக்கவுள்ளது.
அடுத்த வாரம் இந்த திட்டத்தை அமைச்சரவை பரிசீலிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்தால், அனைத்து புதிய தனியார் கூரை சூரிய சக்தி, காற்றாலை, உயிரி எரிபொருள் மற்றும் நகராட்சி திடக்கழிவு ஒப்பந்தங்களின் கீழ் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு அலகு மின்சாரத்திற்கும் செலுத்தப்படும் விலையை இலங்கை மின்சார சபை குறைக்கும்.
இதன்படி, சூரிய மின்சக்திக்கான கட்டணங்கள் 20கிலோ வோட்ஸ் வரைக்கும் ஒரு அலகுக்கு 19.61 ரூபாயாகவும் 20 கிலோ வோட்ஸ்க்கு மேல் 100 வரைக்குமான அலகுக்கு 17.46 ரூபாயாகவும்,100 முதல் 500 வரையான அலகுக்கு 15.49 ஆகவும் 500 முதல் 1 மெகாவோட்ஸ்க்கு குறைவான ஒரு அலகுக்கு 15.07 ரூபாயாகவும், 1 மெகாவோட்ஸ் மற்றும் அதற்கு மேல் ஒரு அலகுக்கு 14.46 ரூபாயாகவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.