பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகளைப் பதிவு செய்வதற்கு புதிய தொலைபேசி இலக்கமொன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சேவையானது 24 மணிநேரமும் செயற்படும் வகையில் இருப்பதால் பொதுமக்கள் எந்நேரமும் இந்த இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ள முடியும் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.
இந்நிலையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினருக்கு ஏதேனும் தகவல் தெரிவிக்க வேண்டிய நிலையில் பொதுமக்கள் அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி 109 எனும் துரித இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை வழங்க முடியுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பெண்கள் தொடர்பான புகார்களையும் வழங்க முடியும் என்பதால் இந்த அழைப்புகளிற்கு பதிலளிப்பதற்காக பெண் காவல்துறை அதிகாரிகள் கடைமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் குற்றங்கள் அதிகரித்து வருவதனால் அவற்றை குறைப்பதற்காகவே இந்த முறைமை அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் இனால் வழங்கப்பட்டிருந்தது.
அதன்படி சென்ற ஆண்டின் (2023) இறுதியில் இலங்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக இந்த ஆண்டு (2024) ஜனவரியில் புதிய தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சரினால் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.