35 முதலீட்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை
இந்த ஆண்டில் இலங்கை 35 முதலீட்டு ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
பிங்கிரிய ஏற்றுமதி செயலாக்க வலயத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் போது அமைச்சர் அமுனுகம இதனைக் குறிப்பிட்டார்.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு நிதியமைச்சினால் நிர்ணயித்தபடி மொத்தம் 1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளை ஈர்க்கும் இலக்கை வெற்றிகரமாக எட்டியுள்ளது.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, இரணைவில, மாங்குளம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில் புதிய முதலீட்டு வலயங்களை அபிவிருத்தி செய்வது குறித்து அமைச்சு தற்போது ஆராய்ந்து வருவதாகவும் திலும் அமுனுகம தெரிவித்தார்.