நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டமூலம்: ஜனாதிபதியின் உறுதிப்பாடு!
உடல் ரீதியான தண்டனையை தடை செய்யும் சட்டத்தை விரைவில் கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) உறுதியளித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியிலேயே குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“அனைத்து வகையிலும் உடல் ரீதியான தண்டனையை தடைசெய்யும் ரீதியில் தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர்களின் 20 ஆண்டுகளுக்கும் மேலான முயற்சிகளுக்குப் பிறகு இந்த மைல்கல் அளவிலான சாதனை கிடைத்துள்ளது.
இதற்கமைய, வர்த்தமானியில் வெளியிடப்பட்டதும், இறுதி ஒப்புதலுக்காக இந்த மனு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்”என சுட்டிக்காட்டியுள்ளார்.