மக்களுக்கு நற்செய்தி: அறிமுகமாகப்போகும் அரசாங்கத்தின் மற்றுமொரு நிவாரணம்

மக்களுக்கு நற்செய்தி: அறிமுகமாகப்போகும் அரசாங்கத்தின் மற்றுமொரு நிவாரணம் | Enable Govpay For The Payment Of Traffic Fines

போக்குவரத்து அபராதங்களை Govpay மூலம் செலுத்துவதற்கான வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது.

வாகன சாரதிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் Govpay மூலம் போக்குவரத்து அபராதங்களை மிக விரைவில் செலுத்த முடியும் என ICTA உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இது குறித்த அடிப்படை பணிகள் நிறுவனத்தல் முடிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Govpay என்பது வரிகள், அபராதங்கள், பயன்பாட்டு கட்டணங்கள் மற்றும் கல்வி கட்டணங்கள் போன்ற அரசு தொடர்பான சேவைகளுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ நிகழ்நிலை கட்டண தளமாகும்.

இந்த நிலையில், பல நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்த பிறகு, குறுகிய காலத்திற்குள் பல புதிய அம்சங்களுடன் Govpay இறுதியாக பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக ஹர்ஷ புரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, Govpay ஐ அறிமுகப்படுத்தியபோது, 16 அரசு நிறுவனங்கள் இருந்ததாகவும், இன்றைய நிலவரப்படி, 25 நிறுவனங்கள் உள்ளளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, ஒவ்வொரு வாரமும், தாங்கள் புதிய அரச நிறுவனங்களைச் இணைத்து வருவதாக புரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button