இலங்கையில் ஜூன் 1ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

இலங்கையில் ஜூன் 1ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை | Mandatory Procedure In Sri Lanka From June 1

இலங்கையில் ஜூன் 1ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி உணவுப் பொருட்களில் கனரக உலோகப் பரிசோதனையே கட்டாயமாக்கப்படுவதாக தெரியவருகிறது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் கருவாடு, நெத்தலி உள்ளிட்ட சில உலர்த்தப்பட்ட மீன் வகைகளில் கனரக உலோகங்கள் மற்றும் ஆசனிக் அதிகளவில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் சில பழ வகைகளிலும் கனரக உலோகமான ஈயம் அதிகளவில் இருப்பதாக சுகாதார அமைச்சகத்தின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு நடத்திய தேசிய உணவுப் பாதுகாப்பு ஆய்வில் தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button