AI தொழிநுட்பத்தை பயன்படுத்தி கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!
கூகுள் AI தொழில்நுட்பத்தின் மூலம் படங்களை உருவாக்கும் பதிப்பை இமேஜன் 2 என்று அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் வார்த்தைகளை படங்களாக மாற்ற முடியும்.
மேலும் கூகுள் கிளவுட்டின் ஒரு பகுதியாக இருக்கும் வெர்டெக்ஸ் ஏஐயைப் பயன்படுத்தும் சிறப்பு வாடிக்கையாளர்களுக்கு இந்த முறையை பயன்படுத்த முடியும்.
இந்த மேம்படுத்தப்பட்ட இமேஜன் 2 அற்புதமான அம்சங்களைக் கொண்டு வருகிறது, இது வார்த்தையை பயன்படுத்தி இன்னும் சிறந்த படங்களை உருவாக்குக்கின்றது.
இது கூகுள் டீப் மைண்டில் இருந்து சில மிக நுட்பமான தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தொழில்நுட்பம் படங்களின் தரத்தை முன்பை விட சிறந்ததாக்கியுள்ளது.
நீங்கள் சொல்லும் வார்த்தைகளிலிருந்து அழகான மற்றும் தெளிவான படங்களை உருவாக்க முடியும் என கூகுளை தெரிவித்துள்ளது.
பயனர்கள் டைப் செய்யும் வார்த்தைகளில் இருந்து அழகான படங்களை உருவாக்குவதோடு படங்களை உருவாக்க வெவ்வேறு மொழிகளில் வார்த்தைகளை உள்ளிடலாம்.
நிறுவனங்கள் மற்றும் தயாரிப்புகளுக்கான லோகோக்களை உருவாக்கி படத்தில் சேர்க்கலாம்.
படத்தில் உள்ளதைச் சரியாகப் பதிலளித்து, தலைப்புகளைச் சேர்க்கலாம். Chinese, இந்தி, ஜப்பானிய, கொரியன், போர்த்துகீசியம், ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் படங்களை உருவாக்கலாம்.
Imagen 2ஐப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தாங்கள் எடுக்கும் படங்கள் தொடர்பாக ஏதேனும் சட்டச் சிக்கல்கள் இருந்தால் கூகுளிடம் முறையிடலாம்.
Imagen 2 ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படங்களின் பதிப்புரிமை அல்லது உரிமையைப் பற்றி ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதாக கூகுள் உறுதியளித்துள்ளது.