இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி!
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
மெட்டா நிறுவனம்,வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என உலகின் முன்னணி சமூக ஊடக வலைதளங்களை நிர்வகித்து வருகிறது.
மெட்டா நிறுவனம் தன்னுடைய பயனர்களை தொடர்ந்து புதிய அப்டேட்களை வழங்கிய வண்ணம் உள்ளது.
இந்நிலையில், பதின்வயதினரினரின் இன்ஸ்டாகிராம் பாவனையை மட்டுப்படுத்தும் விதமாக இந்த புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய அப்டேட்டில் Night time Nudges என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் 10 நிமிடங்களுக்கு மேல் ரீல்ஸ் அல்லது டிஎம்கள் போன்றவற்றிற்காக இரவில் அதிக நேரம் செலவிட்டால் புதிய இரவுநேர நட்ஜ்கள் தோன்றும்.
தாமதமாகிவிட்டது என்பதை நினைவூட்டுவதோடு, ஆப்ஸை இன்ஸ்டாகிராம் பாவனையை நிறுத்தி விட்டு தூக்க செல்லுமாறு அறிவுறுத்தும். இரவு நேர நட்ஜ்கள் தானாகக் காட்டப்படும், அவற்றை அணைக்க முடியாது.
பயன்பாட்டில் ஏற்கனவே “டேக் எ பிரேக்” அம்சம் உள்ளது, இது பதின்ம வயதினருக்கு இன்ஸ்டாகிராமில் இருந்து வழக்கமான இடைவெளிகளை எடுப்பதற்கான நினைவூட்டல்களைக் காட்டுகிறது.
கடந்த வாரம், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் பதின்வயதினர் பார்க்கக்கூடிய உள்ளடக்க வகையை தானாகவே கட்டுப்படுத்தப் போவதாக மெட்டா அறிவித்தது. டிக்டொக் (TikTok) கடந்த மார்ச் மாதத்தில் இதேபோன்ற அம்சத்தை வெளியிட்டது.
அதாவது டிக்டொக் பாவனையை கீழே வைத்துவிட்டு தூங்குவதற்கான நேரம் எப்போது என்பதை பயனர்களுக்கு நினைவூட்டுவதாக அந்த அம்சம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.