வெளிநாட்டு பிரஜைகளுக்கான விசா நடைமுறையில் மாற்றம்

வெளிநாட்டு பிரஜைகளுக்கான விசா நடைமுறையில் மாற்றம் : அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நடைமுறை | Srilanka Visa For Foreigners In Online

வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு வதிவிட விசாக்கள் உட்பட நிகழ்நிலையில் (Online) விண்ணப்பத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் பல்வேறு வகையான விசாக்களை வழங்குவதற்கான அதிகாரத்தை வெளிநாட்டு இலங்கைத் தூதரகங்கள் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்பும் வெளிநாட்டவர்களிடமிருந்து நிகழ்நிலை விசாக்களை ஏற்றுக்கொள்வதை  இலங்கை இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக,  இலங்கை தூதரகங்கள் ஆவணங்களை ஏற்றுக்கொள்வதற்கும் விசா வழங்குவதற்கும் கிட்டத்தட்ட தங்கள் அதிகாரத்தை இழக்கின்றன.

விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்காக VFS Global உடன் இணைந்து விசா வழங்குவதற்கான ஒரே அதிகாரத்தை இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வைத்திருக்கிறது.

குறித்த விடயம் தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு எந்தவொரு வெளிநாட்டவரும் அருகிலுள்ள இலங்கை தூதரகத்தை அடைய வேண்டிய அவசியமில்லை காரணம் நிகழ்நிலையிலேயே யாருக்கும் செய்ய முடியும்.

தற்போது குடியுரிமை விசா விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆவணங்களை ஏற்க பணிகளுக்கு அதிகாரம் உள்ளதுடன் குடியுரிமை விசா விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் நிகழ்நிலை முறையை அறிமுகப்படுத்துவோம்.

அப்போது, ​​குடியுரிமை விசாவுக்கான ஆவணங்களை ஏற்கும் அதிகாரத்தை அந்த பணியகங்கள் இயல்பாகவே இழக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button