தேசிய அடையாள அட்டை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காக ரூ.15 மில்லியன் மதிப்புள்ள முன் அச்சிடப்பட்ட பாலிகார்பனேட் அட்டைகளை வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்த திட்டத்தை சமர்ப்பித்ததாக அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) இன்று (08.04.2025) தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் “புதிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு சுமார் 17 மில்லியன் அட்டைகள் தேவை.
ஆட்பதிவு திணைக்களத்தால், 2017 ஆம் ஆண்டு முதல் தேசிய அடையாள அட்டைகளுக்கு ஸ்மார்ட் கார்டுகளைப் பயன்படுத்தத் தொடங்கியது, என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் மின்னணு தேசிய அடையாள அட்டை திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய முறையின் கீழ், 15 வயதை நிறைவு செய்த அனைத்து இலங்கை குடிமக்களும் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.
இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, 17 மில்லியன் அச்சிடப்பட்ட பாலிகார்பனேட் அட்டைகள் தேவை. கொள்முதல் செய்வதற்கு சர்வதேச போட்டி ஏலங்களை அழைக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.