பணம் இல்லை- கடலில் காத்து கிடக்கும் நிலக்கரி கப்பல்கள்!
பெப்ரவரி மாதத்திற்கான நிலக்கரிக்கு இருபத்தி இரண்டு பில்லியன் ரூபா தேவைப்படுவதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தொகை 2.2 பில்லியன் ரூபா என நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சமரசேகர தெரிவித்துள்ளார்.
தற்போதும் கூட புத்தளத்திற்கு அருகில் உள்ள கடலில் இரண்டு கப்பல்கள் பல நாட்களாக காத்திருப்பதாகவும், அவற்றுக்கான எஞ்சிய பணத்தை செலுத்துவதும் பிரச்சினைக்குரிய சூழ்நிலையாக இருப்பதாக அவர் கூறுகிறார்.
இது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்துமாறு மின்சக்தி அமைச்சருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.