33 நாடுகளுக்கு இனி விசா தேவையில்லை: அரேபிய நாடு வெளியிட்டுள்ள அறிவிப்பு!
இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
சுற்றுலா துறையை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் அந்நாட்டு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஈரானின் சுற்றுலா துறையை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என சுற்றுலாத் ஈரான் துறை அமைச்சர் எஸதுல்லாஹ் சர்காமி தெரிவித்துள்ளார்.
அண்மையில் மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, கென்யா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இந்திய பயணிகளுக்கு விசா தேவையில்லை என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.