வட பகுதி ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை

இலங்கையில் (Srilanka) ஏனைய மாகாணங்களின் கீழ் இயங்கும் கல்வித் திணைக்களங்களில் ஆசிரியர்களுக்கான சம்பளங்கள் வழங்கப்பட்ட பின்னரே சம்பளப் பட்டியலில் கையொப்பம் பெறப்படுகிறது.

ஆனால் வடக்கு மாகாணத்தில் மட்டும் சம்பளம் வழங்குவதற்கு முன்னரே சம்பளத்தை வங்கிக் கணக்கில் பெற்று விட்டதாக ஆசிரியர்களிடம் கையொப்பம் வேண்டி பின்னரே வைப்பில் இடப்படுகிறது.

இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) மாகாண பிரதம கணக்காளர் உட்பட மாகாண கல்வித் திணைக்கள பணிப்பாளர்வரை தொடர்பு கொண்டு சுட்டிக்காட்டிய போது தவறை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சம்பளத்தை வழங்க முதலே பெற்று விட்டோம் என ஆசிரியர்களிடம் கையொப்பம் பெறுவதும் ஒருவேளை கையொப்பமிட்டு ஆசிரியர் இறந்து விட்டால் அவரது சம்பளம் கிடைக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

ஆகவே முறையற்ற கையெழுத்திடல்கள் ஊழலுக்கு வழிவகுக்கும். அதுமட்டுமல்லாது அவ்வாறு கையொப்பம் இடாத ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்து வைக்கும் வேடிக்கையும் வடக்கில் சில வலயங்களில் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.

ஆகவே குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button