இனி எந்த கப்பலும் இலங்கைக்கு வர முடியாது : ரணில் திட்டவட்டம்

இந்தியாவின் அனுமதியின்றி இனி எந்த கப்பலும் இலங்கைக்கு வர முடியாது : ரணில் திட்டவட்டம் | Chinese Spy Ship Arrives In Sri Lanka Shi Yaan 6

சீன உளவுக் கப்பல்கள் எதுவும் இலங்கைக்கு வரவில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச் சபையின் வருடாந்த அமர்வுகளையொட்டி, சர்வதேச சமாதானத்திற்காக நடத்தப்பட்ட கலந்துரையாடலில் உரையாற்றிய போதே அதிபர், இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“உளவுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதை நிரூபிக்க எவரிடமும் எந்த ஆதாரமும் இல்லை.

சீன அறிவியல் கழகம், தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (நாரா) மற்றும் பல பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டே சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன.

இதைப்போன்று கடந்த 10 வருடங்களாக ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கைக்கு வருகின்றன, இதனால் இதுவரையில் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை.

அனால் இந்த ஆராய்ச்சிக் கப்பலை மட்டும் உளவு பார்க்க வருவதாக கூறலாமா என்று கேள்வி எழுப்பினார்.

அதுமாத்திரமல்லாமல், வெளிநாட்டு கப்பல்களுக்கு அனுமதி வழங்குவதற்கென்று இலங்கை நிலையான செயல்பாட்டு நடைமுறையை கொண்டுள்ளது.

இதற்காக சிறிலங்கா கடற்படையினரால் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அமைப்பு அண்மையில் இந்தியாவுடன் கலந்துரையாடல்களை நடத்தியத்துடன், இந்தியா பரிந்துரைத்த திருத்தங்களுக்கும் இலங்கை ஒப்புக்கொண்டுள்ளது.

அதன் பிரகாரம் இனி இலங்கைக்கு வரும் எந்தவொரு கப்பலும் இந்தியாவுடன் கலந்தாலோசித்த பின்னரே இலங்கைக்கு வரும் அனுமதியை பெரும் என்றும் அதிபர் கூறினார்.

இந்தநிலையில், சீனாவின் ஆய்வுக் கப்பலான ஷி யான்-6 எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி இலங்கைக்கு வர உள்ளதாகவும் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய துறைமுகங்களில் நிறுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை பொருளாதார மண்டலம் மற்றும் தெற்கு இந்தியப் பெருங்கடலின் பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தக் கப்பல் வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button