ஜனவரி 7 முதல் 10 வரை பாராளுமன்றம் கூடுகிறது

பாராளுமன்றம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்படுள்ளதாக பாராளுமன்ற  பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் 31.12.2024 அன்று நடைபெற்ற பாராளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் இது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி 7 ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 9.30 முதல் 10.30 மணி வரை வாய்மொழி பதிலுக்கான கேள்வி நேரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

பின்னர் ​​காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை, அரசு தரப்பில், “2024ம் ஆண்டு மத்திய நிதி நிலை அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் கூறினார்.

ஜனவரி 8 ஆம் திகதிபுதன்கிழமை காலை 9.30 – 10.00 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக (4 கேள்விகள்) ஒதுக்கப்பட்டுள்ளது.

பின்னர் 10.00 காலை 10.30 மணி நேரம் வாய்வழி பதிலுக்கான கேள்வி நேரத்திற்காக (5 கேள்விகள்) ஒதுக்கப்பட்டுள்ளது.

பின்னர் காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் விதிமுறைகள், அன்னிய செலாவணி சட்டத்தின் கீழ் ஆணை, பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறை சட்டத்தின் கீழ் ஒழுங்குமுறைகள், கேசினோ வணிக (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் விதிமுறைகள், துறைமுகம் மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரி சட்டத்தின் கீழ் உத்தரவு, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான  ஒழுங்குமுறைகள் குறித்து விவாதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர், மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பின் போது கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 9 ஆம் திகதி வியாழன் காலை 9.30 – 10.30 வரை வாய்வழி பதிலுக்கான கேள்வி நேரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

பின்னர் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு சட்டத்தின் கீழ் உத்தரவு, சிறப்பு சரக்கு வரி சட்டத்தின் கீழ் உத்தரவு மற்றும் நலன்புரி சலுகைகள் சட்டத்தின் கீழ் அறிவிப்புகள் விவாதிக்கப்பட உள்ளன.

எதிர்க்கட்சிகள் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம் சபை ஒத்திவைப்பு தொடர்பான விவாதத்தை மாலை 5.30 மணிவரை நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஜனவரி 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முழு நாளும், மறைந்த முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் உயிரிழந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, எச்.நந்தசேன மற்றும் டியூடர் குணசேகர ஆகியோருக்கு அனுதாபப் பிரேரணைகளுக்கு நேரம் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற பொதுவச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button