பாதுகாப்பு தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து மதிப்பாய்வு!
பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
பொலிஸ் தலைமையகம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
அச்சுறுத்தல்களை எதிர்நோக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சுப் பதவிகளை வகிப்பதால் சிலருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
எனினும் அமைச்சுப் பதவிகளை வகிக்காத சந்தர்ப்பங்களில் அவ்வாறான அச்சுறுத்தல்கள் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இந்த மதிப்பாய்வுகளின் அடிப்படையில் பாதுகாப்பு வழங்குவது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.