பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : பரிந்துரைகளுக்கான குழு தயார்
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து சட்டமா திணைக்கம் விரிவான ஆய்வை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1980 – 1990களில் பட்டலந்த வீட்டு வசதித் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சட்டவிரோத தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் விசாரணை நடத்திய ஆணைக்குழுவின் அறிக்கை, ஏற்கனவே ஜனாதிபதி செயலகத்தால் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில், விரிவான ஆய்வை மேற்கொள்ள மூத்த அதிகாரிகள் குழுவை சட்டமா அதிபர் நியமிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழு, அடுத்த சட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் பரிந்துரைகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.