உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் இலங்கை மக்கள்!
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 34 சதவீதமானோர், உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்வதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த விடயம் குறித்து “லெர்ன் ஏசியா இன்ஸ்டிட்யூட்” நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 5.97 மில்லியன் என்றும், அதில் 32 சதவீதமானோர் அதாவது 1.9 மில்லியன் குடியிருப்பாளர்களில் 7.9 மில்லியன் பேர் உணவு கொள்வனவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக நகைகள் மட்டுமின்றி மரச்சாமான்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள் அல்லது நாற்காலிகள், மேசைகள், படுக்கைகள் போன்றவற்றையும் மக்கள் விற்பனை செய்து உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு 10 குடும்பங்களில் 07 குடும்பங்களின் இருவருக்கு உணவு வழங்குவது மட்டுப்படுத்துவதாக உலக உணவுத் திட்டம் வெளிப்படுத்தியுள்ளது.
அத்தோடு ஒவ்வொரு 10 குடும்பங்களிலும் 08 குடும்பங்கள் ஈட்டும் தற்போதைய வருமானம், பொருளாதார சிக்கல் நிலைக்கு முன்னர் ஈட்டிய வருமானத்தை விட குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.