மதிப்பீட்டு பணிகளில் இருந்து கிராம உத்தியோகத்தர்கள் விலக தீர்மானம்

மதிப்பீட்டு பணிகளில் இருந்து கிராம உத்தியோகத்தர்கள் விலக தீர்மானம் | Village Officials Have Decided To Quit Their Jobs

சனத்தொகை மற்றும் வீட்டு வசதிகள் மதிப்பீட்டு பணிகளில் இருந்து கிராம உத்தியோகத்தர்கள் விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

குறித்த விடயத்தை இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் கமல் கித்சிறி தெரிவித்துள்ளார்.

சனத்தொகை மற்றும் வீட்டு வசதிகள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுவதற்காக உரிய கொடுப்பனவு வழங்கப்படும் வரையில் அந்த பணிகளில் இருந்து கிராம உத்தியொகத்தர்கள் விலகுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

அத்தோடு, இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஏனைய கிராம உத்தியோகத்தர்களின் சங்கங்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், 10 வருடங்களுக்கு ஒரு முறை முன்னெடுக்கும் சனத்தொகை மற்றும் வீட்டு வசதிகள் மதிப்பீட்டு பணிகள் இந்த மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டன

அதன்படி, சனத்தொகை மதிப்பீட்டில் முதல் கட்டமாக அதிபர் செயலகம் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button