மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை

மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை | The Current Dry Weather Is Likely To Continue

தற்போது நிலவும் வறண்ட வானிலை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது, கொழும்பில் 28 டிகிரி செல்சியஸாக இருக்க வேண்டிய வெப்பநிலை இன்று (31 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அதிக வெப்பநிலை மக்களின் அன்றாட நடவடிக்கைகளை சீர்குலைப்பதாகவும், தற்போதைய சூழ்நிலையில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அதன்படி, அதிக வெப்பநிலை காரணமாக உடல் வியர்வையாக நீர் மற்றும் உப்புகளை இழக்கிறது, இது ஆரோக்கியமான நபர்களுக்கு கூட நீரிழப்பை ஏற்படுத்தும் என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நாட்களில் வெளியில் வேலை செய்பவர்கள், குறிப்பாக நெடுஞ்சாலைகளில் வேலை செய்பவர்கள் மற்றும் நெல் வயல்களில் வேலை செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடுமையான நீரிழப்பு இதயத்தையும் மூளையையும் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலைமைகளைத் தவிர்க்க, அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதோடு, பெரும்பாலும் இயற்கை திரவங்களையே குடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி செயற்கை திரவங்களை குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதையும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button