உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு..!

மே மாதம் முதல் நாளொன்றுக்கு ஒரு மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை விநியோகத்தை குறைக்கப் போவதாக OPEC plus நாடுகள் அறிவித்ததை அடுத்து உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

OPEC plus அமைப்பானது உலகின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் 40 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.

சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெயை விநியோகத்தில் இருந்து 500,000 பீப்பாய்களை குறைப்பதாக அறிவித்துள்ளது.

மேலும் ஈராக் தனது விநியோகத்தில் இருந்து 211,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயை குறைப்பதாக அறிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் விநியோகத்தை குறைப்பதன் நோக்கம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலையை நிலைநிறுத்துவதாக சவுதி எரிசக்தி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

OPEC plus அமைப்பினால் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவின் நோக்கம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலையை 80 அமெரிக்க டொலர்களுக்கு மேல் வைத்திருப்பதே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலக கச்சா எண்ணெய் சந்தையில் இன்று (03) பிரண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.59 அமெரிக்க டொலர்களாகவும், WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.12 அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button