விவசாயிகளுக்கு இலவச உரம் : வெளியான மகிழ்ச்சி தகவல்
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் 55,000 மெற்றிக் தொன் அடிகட்டு பசளை உரம் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
உலக உணவுத் திட்டத்துடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உர இருப்பு கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை!
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், குறைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசி 200 ரூபாவாகவும், ஒரு கிலோ உருளைக்கிழங்கு – 215 ரூபாவாகவும் மற்றும் ஒரு கிலோ வெள்ளை சீனி 247 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு கிலோ பருப்பு 278 ரூபாவாகவும், ஒரு கிலோ கடலை 441 ரூபாவாகவும், ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 785 ரூபாவாகவும், ஒரு கிலோ சிவப்பு கௌப்பி 90 ரூபாவாகவும் மற்றும் ஒரு கிலோ பாசிப்பயறு 92 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில், எதிர்வரும் இரண்டு பயிர்ச்செய்கைக் காலங்களுக்குத் தேவையான அடிகட்டு பசளை உரங்கள் இந்தப் பருவத்திலிருந்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.