ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி
ஊழல் ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த யோசனை ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டம் நடைமுறைப்படுத்திய பின்னர் குறித்த சட்டத்துக்கு அமைய புலனாய்வு, வழக்கு தாக்கல் செய்தல், நிரவாக ரீதியான மற்றும் நீதிமன்ற ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுக்கு கணிசமான சட்ட ரீதியான பொருள்கோடல்கள் மற்றும் தொழில்நுட்ப பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
எனவே மேற்குறித்த சட்டத்தின் சில பிரிவுகளை திருத்தம் செய்தல் மற்றும் புதிதாக சில பிரிவுகளை அறிமுகம் செய்வதற்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முன்மொழிந்துள்ளது.
இதற்கமைய குறித்த சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது.