கொழும்பு புறநகர் பகுதியில் தொடர்ந்து அதிகரிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை
கொழும்பு புறநகர் பிராந்தியத்தில் உள்ள வத்தளைப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான சந்தை வளர்ச்சியடைந்து கொண்டு செல்வதாக இலங்கையின் காணி விற்பனை முகவரின் நிபுணர் தெரிவித்துள்ளார்.
காணி விற்பனை முகவர் வெளியிட்டுள்ள அண்மைய தரவுகளின்படி, வத்தளை பகுதியில் சராசரி அடுக்குமாடி குடியிருப்பின் (2 மற்றும் 3 அடுக்கு) விலை ஒரு சதுர அடிக்கு ரூ.23,447 ஆக உயர்ந்துள்ளது, இது கடந்த ஒகஸ்ட் மாதம், ஒரு சதுர அடிக்கு 23,411 ரூபாயாக காணப்பட்டது.
சென்ற ஆண்டுடன் (2022) ஒப்பிடும்போது இது 3.5 சதவீத வருடாந்த உயர்வைக் காண்பிக்கிறது.
இலங்கை ரூபாவின் விலையில் ஏற்பட்டுள்ள சரிவே இந்த குடியிருப்புக்களின் விலை அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
காணி விற்பனை முகவர் சந்தையில் புதிய போட்டியாளர்கள் இணைந்திருப்பதும் அவர்கள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியிருப்பதும் இந்த விடயத்தில் பாரிய செல்வாக்கினை செலுத்தியிருக்கிறது என்றும் காணி விற்பனை முகவரின் நிபுணர் தெரிவித்துள்ளார், இது இந்த துறைக்கு சாதகமான அறிகுறி என்றும் அவர் கூறிப்பிட்டிருந்தார்.